செய்திகள் :

இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

post image

இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றினார்.

பேரவையில் இன்று முதல்வர் ஆற்றிய உரையின்போது, இங்கு இருமொழிக்கொள்கை குறித்து என்ன உணர்வோடு நாங்கள் இருக்கிறோம், தமிழ்நாடு இருக்கிறது என்பதை பிராதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏன் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள், குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இங்கே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்காட்டியிருக்கின்றார்கள்.

நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் அதிகாரிகள் மூலமாக இந்த இருமொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்திற்கு விளக்கம் தந்ததாகவும் அதில் ஒரு தவறான கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யக்கூடிய நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தயவுசெய்து எந்த சந்தேகமும் படவேண்டாம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றுதான் அவர்களுக்கு நாங்கள் விளக்கம் தந்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.-வை சார்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள்.

இன்று காலையில் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் டெல்லிக்குச் சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது.

அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை இந்த அவையின் மூலமாக நான் எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ப... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து... மேலும் பார்க்க

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க