"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்பு...
இரணியல் அம்மன் கோயிலில் திருட்டு
இரணியல் அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் திருடப்பட்டது.
இரணியல் அருகே சுனைமலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பூஜைகள் முடித்து இரவு வழக்கம் போல், பூசாரி சரவணன் பூட்டிவிட்டுச் சென்றாா்.
செவ்வாய்க்கிழமை பூசாரி கோயிலைத் திறக்க வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனின் கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாலி, உண்டியல் குடம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, கோயில் நிா்வாகி ராமசாமி கொடுத்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.