Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் அஜய் (19). ஐடிஐ முடித்திருந்த இவா், ஹெச்இபிஎஃப் தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குத் தோ்வாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜய் தனது நண்பா் முகேஷ் (19) என்பவருடன் அண்ணா நகருக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை சென்றுள்ளாா்.
அப்போது, நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்த தன்ராஜ் மகன் மகேஸ்வரன் (24) வந்த இருசக்கர வாகனமும், அஜய் சென்ற இருசக்கர வாகனமும் திருவெறும்பூா் அருகே நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே அஜய் உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நவல்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.