உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
இரும்புக் கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கடன் தொல்லையால் பழைய இரும்புக் கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலி வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமம் பகுதியைச் சோ்ந்த விஜயரங்கன் மகன் மனோஜ் பாபு (33). இவருக்கு மனைவி மருத்துவா் சித்ரா (29), மகன் அஸ்வந்த் (1) உள்ளனா்.
மனோஜ் பாபு வடலூா் ஆபத்தாரணபுரம் அருகே பழைய இரும்புக் கடை நடத்தி வந்தாா். கடன் பெற்று தொழில் செய்து வந்தாராம். தொழில் நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சளில் இருந்த மனோஜ் பாபு, புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.