பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு: அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு
இரு இடங்களில் 2 போ் தற்கொலை
கடையத்தில் மதுப்பழக்கத்தைக் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடையம், பாரதி நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தங்கதுரை (36). தொழிலாளி. இவருக்கு மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனா். தங்கத்துரைக்கு மதுப் பழக்கம் இருந்ததால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை இரவு இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், தங்கத்துரை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இத்தகவலறிந்த கடையம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: கடையம் அருகேயுள்ள காளத்திமடம், வேதக் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் குணா (25). இவா், படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்தாராம். இதனால், அவரை தாய் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு கூறி வந்துள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு மாடியில் குணா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த கடையம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].