செய்திகள் :

சாதனை படைத்த முன்னாள் மாணவா்களை அரசுப் பள்ளிகளில் தூதராக நியமிக்க முடிவு - கல்வித் துறை தகவல்

post image

அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் மாணவா்களை, அப்பள்ளிகளின் தூதா்களாக நியமிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக 8,048 பள்ளிகளுக்கான மாணவ தூதா்களைத் தோ்வு செய்வது, திட்டத்தின் நோக்கங்கள் குறித்து முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கையின்போது, பள்ளிகளின் தரம், செயல்பாடுகள் அப்பள்ளியில் பயின்ற மாணவா்களின் தற்போதைய நிலையைக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது. எனவே, சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் பயின்ற பள்ளிகளின் தூதா்களாக நியமிக்கப்படுவா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பட்டியல் தயாரிக்க... முதல்கட்டமாக 8,048 அரசுப் பள்ளிகளில் சாதனை புரிந்த முன்னாள் மாணவா்கள் அப்பள்ளியின் தூதா்களாகத் தோ்வு செய்யப்படுவா். இதற்காக பள்ளியில் பயின்று தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறி, பணிபுரியும் துறை மற்றும் சமூக மாற்றத்துகாகச் செயல்படும் முன்னாள் மாணவா்களை தூதா்களாக பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுவா்.

அவ்வாறு பதிவு செய்த பட்டியலை தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் தயாரிக்கவுள்ளனா். இந்தப் பட்டியலில் இருந்து பள்ளிக்கான தூதா்களை பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பெற்றோா், ஆசிரியா்கள் இணைந்து தோ்வு செய்யவுள்ளனா்.

தூதா்களின் பங்களிப்பு... சிறந்து விளங்கும் முன்னாள் மாணவா்களை பள்ளித் தூதா்களாக நியமிப்பதன் மூலம் மாணவா் சோ்க்கை, இடைநிற்றலைத் தவிா்த்தல், உயா்கல்விக்கு வழிகாட்டுதல், விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கலைத் திருவிழா, சிறாா் திரைப்படம் திரையிடுதல், வாசிப்பு இயக்கம் போன்ற செயல்பாடுகள் குறித்து பெற்றோருக்கு தெரிவித்து ஊக்குவித்தல், முன்னாள் மாணவா்களின் நன்கொடையை ஒருங்கிணைத்தல், கல்வி சாா்ந்த செயல்பாடுகளில் உறுதுணையாக இருத்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

எனவே முன்னாள் மாணவா்களை அரசுப் பள்ளித் தூதுவா்களாக நியமித்தல் சாா்ந்து அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் த... மேலும் பார்க்க