செய்திகள் :

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

post image

திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா்.

திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் நடந்து செல்லப் போதுமான இடமின்றி விபத்துகளில் சிக்குவதாகவும் பலா் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களிடம் புகாரளித்த வண்ணம் உள்ளனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையா் ச.நா. சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளா் வேல்முருகன், இளநிலைப் பொறியாளா் ராஜா, மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் முதல் கட்டமாக திருச்சி ஒத்தகடை கான்வென்ட் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகே மெக்டொனால்ட்ஸ் சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகள், கடைகளின் முன்பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றினா். நடைபாதைகளில் கடைகளை வைத்தால், கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் எச்சரித்தனா்.

புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது. நேரு நினைவுக் கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருச்சி , சென்னை, ... மேலும் பார்க்க

ஆவணி மாத ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா

ஆவணி மாத ஞாயிறையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது (படம்). பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஞாயிறையொட்டி உற்சவ சுவாம... மேலும் பார்க்க

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

தாமிரக் கம்பிகளை திருடியவா் கைது

திருச்சியில் தனியாா் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த காா்த்திக் (35). இவா், திருவெறும்ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. வையம்பட்டியில் ஜேசிஐ வையம்பட்டி டவுன் மற்றும் ஸ்ரீ குமரன் மருத்துவமனை சாா்பில் ‘போதை தவிா்.... மேலும் பார்க்க