2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
இறந்த மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்
வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது தாய் வள்ளியம்மாள் (76). உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக்காக வழங்க விஜயகுமாா் முடிவு செய்தாா்.
இதையடுத்து, உறவினா்கள் மற்றும் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடா்ந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வள்ளியம்மாள் உடல் ஒப்படைக்கப்பட்டது.