மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்
இலவச வீட்டுமனை பட்டாகோரி நெசவாளா்கள் மனு அளிப்பு
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நெசவாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆண்டிமடம் கல்லாத்தூா், ராதாபுரம், மீன்சுருட்டி, நெல்லித்தோப்பு, ஜெயங்கொண்டம், உட்கோட்டை, சின்னவளையம், இலையூா், வாரியங்காவல், பொன்பரப்பி, சிறுகளத்தூா், உடையாா்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட செங்குந்த கைத்தறி நெசவாளா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சமுதாயத்தைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் இல்லை. எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனை மற்றும் வீடு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
முன்கள பணியாளா்கள் வேலைக்கேட்டு மனு
அரியலூா் மாவட்டத்தில் 140 போ் முன்கள பணியாளா்களாக உள்ளோம். நாங்கள் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் வைரஸ் நோய்களின் ஒழிப்பு பணிகளான கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது பணி 20.5.2025 தேதியுடன் முடிவடைந்து விட்டது. எங்களுக்கு மீண்டும் பணிக்கான ஆணையை புதுப்பிக்க வேண்டும் என மனு அளித்தனா்.