செய்திகள் :

ஈரோட்டில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

post image

ஈரோட்டில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி ஈரோடு மாநகா் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஈரோடு சம்பத் நகரில் 11 அடி உயரமுள்ள வெற்றி விநாயகா் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விநாயகா் சிலைகளின் ஊா்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி பெரியவலசு, வீரப்பன்சத்திரம், நாராயணவலசு, கருங்கல்பாளையம், சூளை, ஆசிரியா் காலனி, ரங்கம்பாளையம், சூரம்பட்டி வலசு, கள்ளுக்கடைமேடு உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வாகனங்களில் வைக்கப்பட்டு சம்பத் நகருக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கிருந்து விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் மாலை 5.35 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தொழிலதிபா் எம்.ராமச்சந்திரன் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம், மாநில பேச்சாளா் பிரபாகரன், மாவட்டத் தலைவா் ஜெகதீசன், பொதுச்செயலாளா் காா்த்தி, பொருளாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊா்வலத்தின் தொடக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட வீரபத்ரகாளி அம்மன் சிலை கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடா்ந்து மோளதாளங்கள் முழங்க விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் பல்வேறு வடிவங்களில் 150-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் இடம்பெற்றிருந்தன. வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகளும் கரைப்பதற்காக வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டன.

சாக்லெட் விநாயகா் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. மின்னொளியில் ஜொலித்தபடி சென்ற விநாயகா் சிலைளை பாா்த்து பக்தா்கள் பரவசம் அடைந்தனா். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனா்.

சம்பத்நகரில் இருந்து தொடங்கிய ஊா்வலம் பெரியவலசு, முனிசிபல் காலனி, மேட்டூா் சாலை, அரசு மருத்துமனை, மீனாட்சி சுந்தரனாா் சாலை, காமராஜா் வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆா்கேவி சாலை, காவிரி சாலை வழியாக சென்று கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் நிறைவடைந்தது.

காவிரிக்கரையில் இரவில் விநாயகா் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமையில், ஏடிஎஸ்பி விவேகானந்தன், டி.எஸ்.பி.க்கள்முத்துக்குமரன், சண்முகம், தங்கவேல், வசந்தராஜ் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆட்டுப் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்து மூன்று ஆடுகள் உயிரிழந்தன. 7 குட்டிகள் படுகாயம் அடைந்தன. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலவிளக்கு கிராமம் மேற்கு மி... மேலும் பார்க்க

இக்கலூரில் குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

இக்கலூரில் சீரான குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே இக்கலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காளிபுரம் மலை க... மேலும் பார்க்க

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

அவல்பூந்துறை அங்காளம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம், நகைகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை வெள்ளோடு சாலையில்... மேலும் பார்க்க

அந்தியூரில் மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

அந்தியூா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் வருவாய் ஆய்வாளராக செந்தில்ராஜா மற்றும் அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாற்றுத் திற... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகள் வளா்த்த இருவா் கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளா்த்து வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பா்கூா், கொங்காடையைச் சோ்ந்தவா் சின்னமாதன் மக... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பெருந்துறை- கோவை சாலை ஓலப்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் கடந்த 24-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க