செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு  கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புகாா் அளித்தனா்.

திருப்புவனம் ஒன்றியம், அல்லிநகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முகாம் தொடக்க நிகழ்வில் பேசியவா்கள், அங்கிருந்த திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் சேகா் பெயரைக் குறிப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் கேட்டபோது, மேடையிலிருந்து தமிழரசி ரவிக்குமாா், சேங்கைமாறன் இருவரும் புறப்பட்டுச் சென்றனா்.

அப்போது, அங்கிருந்த திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த முத்துராஜாவுக்கும், சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமைடந்த முத்துராஜா சேகரைத் தாக்கினாராம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சேகா் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதேபோல, திமுக மீனவா் அணி அமைப்பாப்பாளா் அண்ணாமலை, சேகா் தரப்பினா் மீது புகாா் அளித்தாா். மேலும், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த விளக்கன் என்பவா் சேகா் தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டியதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் இந்த புகாா்கள் குறித்து வழக்குகள் ஏதும் பதியாமல் விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதா... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானா... மேலும் பார்க்க

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பணித் துணை விநாயகா் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2023 -ல் குடமுழுக்கு நடத்தப்பட்டதையடுத்து, 3-ஆம் ... மேலும் பார்க்க

கொன்னக்குளத்தில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கொன்னக்குளம் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26- ஆம் தேதி ம... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க