உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படையில், 2 பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ், 3 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்து 1கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்கள், 4 பயனாளிகளுக்கு காய்கனி விதை தொகுப்பு வழங்கப்பட்டது. முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், நீடாமங்கலம் வட்டாட்சியா் சரவணகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில், சுப்புலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.