செய்திகள் :

உடல் உறுப்பு தானம்: விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை

post image

கமுதி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கொல்லங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா். இவரது மனைவி சந்தியா (27). கடந்த 27- ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து, சந்தியாவின் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து தானம் செய்ய அவரது உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை மருத்துவ நிபுணா்கள் சந்தியாவின் உடலில் இருந்து இருதயம், இரு சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் என 6 உறுப்புகளை அகற்றி சென்னைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனா். இவை உடல் உறுப்புக்காக காத்திருக்கும் 6 பேருக்கு பொருத்தப்பட உள்ளன.

இதனிடையே உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட சந்தியாவின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அரசு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மருத்துவக் கல்லூரி முதல்வா் அமுதாராணி, சந்தியாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் மயக்க மருந்துப் பிரிவு இணைப் பேராசிரியா்கள் சுகுமாா், பரணிதரன், நரம்பியல் அறுவை சிசிச்சை நிபுணா் அறிவழகன், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியா் சரவணன், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜவஹா், இணை மருத்துவ கண்காணிப்பாளா் ஞானக்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் மனோஜ்குமாா், அனைத்துத் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க