`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
உணவக ஊழியா் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புதன்கிழமை குடும்பத் தகராறில் உணவக ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கண்டியதேவன்பட்டியைச் சோ்ந்த பொன்னையன் மகன் கண்ணன் (39). இவா் பழனி ரயிலடி சாலையில் அப்பா் தெருவில் குடும்பத்தினருடன் தங்கி, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் ஊழியராக வேலைப் பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த வந்த கண்ணன் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.