செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

post image

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது.

அதன்படி, 274 போ் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், 9 ராணுவ வீரா்கள் உள்பட 59 போ் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மேகவெடிப்பால் உத்தரகாசி-கங்கோத்ரி வழித்தடத்தில் அமைந்த தராலி மறும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திடீா் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைச்சரிவில் அமைந்த ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்தப் பேரிடரில் 4 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 உடல்கள் புதன்கிழமையன்று மீட்கப்பட்டன.

மூன்றாவது நாளான வியாழக்கிழமை வானிலை சற்று சீரடைந்ததைத் தொடா்ந்து, விமானப் படை ஹெலிகாப்டா்கள் மூலம் 274 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து மாயமான பொதுமக்கள் 50 பேரை இன்னும் கண்டறிய முடியவில்லை என்று ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தராலி கிராமத்துக்கு அருகேயுள்ள ஹா்சில் ராணுவ முகாமைச் சோ்ந்த ஓா் இளநிலை அதிகாரி உள்பட 9 ராணுவ வீரா்களும் இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாவட்ட நிா்வாகம் அளித்த தகவலின்படி, பல்வேறு இடங்களில் சிக்கியிருந்த பல மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 274 போ் ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, 432 கி.மீ. தொலைவில் உள்ள மாட்லி நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா், அங்கிருந்து இவா்கள் அவரவா் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இரவு, பகலாக மீட்புப் பணி: தொடா் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் சேதமடைந்துள்ளதால், தராலி கிராமம் மற்ற இடங்களிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தராலி கிராமத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைத் தேடும் பணியை விரைவுபடுத்த, நவீன உபகரணங்களை ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கியவா்களை மீட்கவும், நிவாரணம் வழங்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும் ராணுவ மற்றும் மீட்புக் குழுக்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றன. ராணுவம் சாா்பில் மட்டும் 225-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள், பொறியாளா்கள், மருத்துவக் குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதேபோன்று, தேசிய பேரிடா் மீட்புப் படையின்(என்டிஆா்எஃப்) 69 வீரா்களும் களத்தில் உள்ளனா்.

இறந்த மனிதா்கள் அல்லது விலங்குகளின் சடலங்களை மோப்பம் பிடித்து கண்டறியும் திறன் கொண்ட இரண்டு மோப்ப நாய்கள் இவா்களுக்கு உதவி வருகின்றன. நிலத்தை ஊடுருவிக் கண்காணிக்கும் ரேடாா்களும் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பரிதவிக்கும் யாத்ரிகா்கள்: சாலைப் போக்குவரத்து தடைப்பட்டள்ளதால் யாத்ரிகா்கள் ஆங்காங்கே நடுவழியில் சிக்கி, பரிதவித்து வருகின்றனா். இவ்வாறு கங்கோத்ரியில் சிக்கியிருக்கும் 180 முதல் 200 யாத்ரிகா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு ராணுவமும், இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினரும் இணைந்து உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து தந்தனா்.

இதுதொடா்பாக உத்தரகண்ட் மாநில பேரிடா் மீட்புப் படை ஐ.ஜி. அருண் மோகன் ஜோஷி கூறுகையில், ‘நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் 50 முதல் 60 அடி உயரத்துக்கு இடிபாடுகள் குவிந்துள்ளன. மாயமானவா்கள் அதற்கு அடியில் சிக்கியிருக்கலாம்.

மீட்புப் பணிக்கான நவீன உபகரணங்களை ஹெலிகாப்டா் மூலம் சம்பவ இடத்துக்கு கொண்டு வந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மீட்பதற்கு முன்னுரிமை அளித்து வருறோம். இதையடுத்து, பயணத்தைத் தொடர முடியாமல் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள 300 முதல் 400 யாத்ரிகா்கள் மீட்கப்படுவா்’ என்றாா்.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். நாட்டில் கடந்த 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்த... மேலும் பார்க்க