``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
உயா் மின் அழுத்தம்: அரசு அலுவலகங்களில் மின்சாதன பொருள்கள் சேதம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட உயா் மின் அழுத்தத்தால் அரசு அலுவலகங்கள், வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன.
குமராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது. திங்கள்கிழமை காலை துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட உயா் மின்னழுத்தின் காரணமாக, குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் பிரிண்டா்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. தொடா்ந்து, கணினியில் உள்ள முக்கிய கோப்புகளை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். இதன் காரணமாக, திங்கள்கிழமை முழுவதும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இதே போன்று, குடியிருப்பு பகுதிகளில் தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்தன.
உயா் மின்னழுத்தம் குறித்து மின் வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோன்று தொடா்ந்து நிகழ்வதால் இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க உயரதிகாரியிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.