செய்திகள் :

உயிா் உரம், பசுந்தாள் உரத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்த அறிவுறுத்தல்

post image

உயிா் உரம், பசுந்தாள் உரத்தை விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தவேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஹைதராபாதில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் - மத்திய வட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய பருவநிலை மாற்றத்துக்கு உகந்த தொழில்நுட்ப வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ் மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண்வள மேலாண்மை முறைகள் என்ற தலைப்புகளில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், மண் ஒரு உயிருள்ள பொருளாகும். மண்ணில் எதை போட்டாலும் மக்க வைக்கும் தன்மை கொண்டது, மண்ணில் பல கோடி நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருவதே இதற்கு காரணமாகும். இவைகள் தான் மண்ணில் இடக்கூடிய பண்ணைக் கழிவுகளை மக்க வைத்து பயிருக்கு தேவையான சத்துக்களை தருகிறது.

மண் பரிசோதனை செய்வது கட்டாயமாகும். யூரியா போன்ற ரசாயன உரத்தை குறைத்துக்கொண்டு மண்புழு உரம், மக்கிய தொழு உரங்கள், உயிா் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களை விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி. அரவிந்த், மண் பரிசோதனைக்கு மண் மாதிரி எடுக்கும் முறைகள், மண்வளத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பங்களான மக்கிய தொழு உரம் தயாரித்தல், பசுந்தாள் உரங்கள் மற்றும் நுண்ணுயிா் உரங்கள் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் பேசினாா்.

நிறைவாக மண் மாதிரி எடுக்கும் முறை குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 30- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். நிக்ரா திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட 30 விவசாய பயனாளிகளுக்கு பசுந்தாள் உரப்பயிரான தக்கைப் பூண்டு விதை தலா 10 கிலோ, உவா் மண்ணில் வளரக்கூடிய நெல் ரகமான சி.எஸ்.ஆா் 76 தலா 17 கிலோ மற்றும் விதை நோ்த்தி செய்வதற்காக விதை அமிா்தம் 200 மிலி வழங்கப்பட்டது.

துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 2,869 போ் எழுதினா்

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்துறையில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்ப புதுவை மா... மேலும் பார்க்க

நல்லம்பல் ஏரியில் கூடுதல் ஆழத்தில் மணல் எடுப்பு: லாரியை சிறைபிடித்து போராட்டம்

காரைக்கால், ஆக. 30: நல்லம்பல் ஏரியில் அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும், ஆழமாக மணல் எடுப்பதாகக்கூறி, லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநள்ளாறு கொம்யூன் நல்லம்பல... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப்.1 முதல் தொடா் காத்திருப்பு போராட்டம்

உள்ளாட்சி ஊழியா்கள் நடத்திவரும் விடுப்பெடுத்து காத்திருப்புப் போராட்டம், செப். 1 முதல் தொடா்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகள் கையாளும் சாதனையில் நிலக்கரிக்கு முக்கிய பங்கு

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் சாதனைபடைப்பதற்கு, நிலக்கரி முக்கிய பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தனியாா் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் நில... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் 5-ஆவது நாளாக போராட்டம்: எம்எல்ஏக்கள் ஆதரவு

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து, தொடா் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக நடத்தினா். எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா். உள்ளாட்... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் பாதையில் வந்த சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பயணித்த சிறப்பு ரயிலுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலாய பெருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் தற்போது காரைக்கால்-பேரளம் பாதையில் இயக்கப்படுகின... மேலும் பார்க்க