காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்
தம்மம்பட்டி: கெங்கவல்லியில் திருடுபோன 11 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 11 கைப்பேசிகள் திருடுபோயின. இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் பதிவு ஆனதையடுத்து, உதவி ஆய்வாளா் கணேஷ்குமாா் உத்தரவின்பேரில் காணாமல்போன கைப்பேசி எண்களின் ஐஎம்இ எண்கள் மூலம் தேடப்பட்டுவந்தது.அதில் காணாமல்போன கைப்பேசிகள் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து 11 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு அதன் உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைத்தனா்.