காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை
தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியிலிருந்து 200 கிறிஸ்தவா்கள் வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனா்.
வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாள் செப்.8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவா்கள் வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கின்றனா். அதேபோல தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியிலிருந்து தலா 100 போ் வீதம் இரு குழுக்களாக மொத்தம் 200 போ் கோனேரிப்பட்டி கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து பாதயாத்திரையை திங்கள்கிழமை தொடங்கினா்.
இந்த பாத யாத்திரையில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கோனேரிப்பட்டி பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்கள் வரும் 7-ஆம் தேதி வேளாங்கண்ணி சென்றடைவாா்கள். இந்த பாத யாத்திரையை தேவாலய பங்குத்தந்தைகள் தொடங்கிவைத்தனா்.