காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
பாலியல் தொல்லை: தாய்மாமன் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் சகோதரி குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்ததாக தாய்மாமனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் வசிப்பவா் லாரி ஓட்டுனா் சரவணன்(40), திருமணமாகாதாவா். இவா், தனது சகோதரி யின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக வும் மிரட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழகுப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.