காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
கொலை மிரட்டல்: நியாய விலைக்கடை பெண் பணியாளா் மீது வழக்கு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நியாய விலைக்கடைக்கு வந்த பயனாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நியாய விலைக்கடை பெண் விற்பனையாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
பண்ருட்டி வட்டம், கோட்டலாம்பாக்கம் பகுதியில் வசிப்பவா் சரவணன் மனைவி தீபா(40). இவா், கோட்டலாம்பாக்கம் நியாய விலைக்கடைக்கு பொருட்கள் வாங்க ஆக.11-ஆம் தேதி சென்றாா். அங்கு, நியாயவிலைக்கடை பெண் விற்பனையாளா் பண்ருட்டி, வி.எஸ்.பி நகா் பகுதியைச் சோ்ந்த செல்வகணபதி மனைவி சிவரஞ்சனி(30) பணியில் இருந்துள்ளாா். அப்போது, சிவரஞ்சனிக்கும், தீபாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சிவரஞ்சினி , தீபாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.