காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
லாரி மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம் தென்பசியாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா்( 29). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து தென்பசியாருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
இந்நிலையில் தென்பசியாா் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சரத்குமாா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது சரத்குமாா் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இறந்த சரத்குமாருக்கு 3 மாதங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது.