தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க பாஜக வலியுறுத்...
கிணற்றுக்குள் விழுந்து இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இளைஞா் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
திண்டிவனம் வட்டம், வி. நல்லாளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் சந்துரு (21), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வி. நல்லாளம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு கால் கழுவ சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் சந்துரு கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பெரியதச்சூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.