காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவம் வட்டம், கொள்ளாா், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43), திருமணம் ஆனவா். கூலி வேலைசெய்து வந்தாா். வெங்கடேசனுக்கும் மனைவி அம்முவுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.