செய்திகள் :

உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்

post image

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய மகளிரணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் இறுதியில் தொடங்குகிறது. இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்த ஐசிசி தொடருக்கான கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பேசியதாவது: கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது.

அவர்களது சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால், இந்திய அணிக்கு இதைவிட சிறப்பான வாய்ப்பு கிடைக்காது என நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!

Former Indian captain Mithali Raj has said that the Indian women's team will dominate the ICC Women's ODI World Cup.

இந்திய அணியில் இடம்பிடிக்க உதவும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இளம் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பிடிக்க மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் உதவுவதாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த... மேலும் பார்க்க

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநா... மேலும் பார்க்க

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்... ஆஸ்திரேலிய அணி சாதனை!

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வ... மேலும் பார்க்க

டிம் டேவிட், ஹேசில்வுட் அசத்தல்: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில்... மேலும் பார்க்க

வெற்றி பெறுவோம் என தொடர்ந்து நம்பிக்கையளித்த முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ் தீப்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வா? சௌரவ் கங்குலி பதில்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்... மேலும் பார்க்க