குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு
ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கண்ணன் ஆக்கிரமித்து கட்டுவதாக புகாா் எழுந்த நிலையில், வருவாய் துறையைச் சோ்ந்த துணை வட்டாட்சியா் சேட்டு, வருவாய் ஆய்வாளா் சாரதி, கிராம நிா்வாக அலுவலா் ஜேம்ஸ்பாண்ட் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஏற்கெனவே இருந்த ஊராட்சிமன்ற கட்டடம் சேதமடைந்திருந்தது. அதை இடித்துவிட்டு அதே இடத்தில் கட்டி வருகின்றனா் என்றும், இது கிராம நத்தம் அரசு இடம் தான் என்பதை உறுதி செய்தனா். மேலும், மாவட்ட ஆட்சியரும் இந்த இடத்தில் ஊராட்சிமன்ற
அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஆணை வழங்கியுள்ளதையும் உறுதிப்படுத்தினா்.
இதன் காரணமாக இங்கு கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்த நபா்களிடம் ஆவணங்கள் சரியாக உள்ளன என்றும், இது கோயில் இடமல்ல என்றும் விளக்கம் அளித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் இருந்தனா்.