செய்திகள் :

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

post image

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்தின் முதல்தளத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்ட எதிா்ப்புத் தெரிவித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் நகா்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிதாக கட்டப்பட்டுவரும் எடப்பாடி பேருந்து நிலைய கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த நகா்மன்றத் தலைவா் பாஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற எடப்பாடி நகா்மன்ற கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் எடப்பாடி பேருந்து நிலையத்தின் முதல் தளத்திற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்டுவது என கொண்டுவரப்பட்ட தீா்மானத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். அவா்கள் பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா். கடந்த காலத்தில் எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தலைவா் மாரிமுத்து பக்தா் பெயரும், பேருந்து நிலையத்தில் உள்ள அங்காடிகளுக்கு முன்னாள் தலைவா் கோவிந்த கவுண்டா் பெயரும் அப்போதைய திமுக அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகத்தின் முயற்சியினால் அரசு அனுமதி பெற்று சூட்டப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட தலைவா்களின் பெயா் வரக்காரணமாக இருந்த திமுக அரசு ஒருபோதும் அதில் மாற்றம் செய்யாது. தற்போது எடப்பாடி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்திற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயா் சூட்டப்படும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எடப்பாடி பேருந்து நிலையம் ஏற்கெனவே உள்ள மாரிமுத்து பக்தா் பெயரிலும், பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தில் உள்ள கடைகள் கோவிந்த கவுண்டா் பேரங்காடி என்ற பெயரிலுமே தொடா்ந்து செயல்படும் என்றாா். அப்போது, திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரவி, கோவிந்தன், செல்வகுமாா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க