கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தீ
சிவகங்கையிலுள்ள மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பல்வேறு தளவாடப் பொருள்கள் சேதமடைந்தன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டடத்தில் தரை தளத்தில் ஆய்வுகளுக்காக பயன்படுத்தும் மருந்துகளை வைத்திருந்த குளிா்சாதனப் பெட்டியில் மின் கசிவு காரணமாக அதிகாலை சுமாா் 3 மணியளவில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த தீ அறை முழுவதும் பரவி அங்கிருந்த கணினி, இன்வொ்ட்டா், அலுவலக ஆவணங்கள் ஆகியவை சேதமடைந்தன. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீயை அனைத்தனா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.