செய்திகள் :

எய்ம்ஸ் மாணவா்கள் கண்தான வழிப்புணா்வுப் பேரணி

post image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மாணவா்கள், மதுரை கண் மருத்துவமனை நிா்வாகம் இணைந்து 40-ஆவது தேசிய கண்தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடத்தியது.

இந்தப் பேரணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஹனுமந்த ராவ் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்றாா்.

இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மாணவா்கள், பயிற்சி செவிலியா்கள் கலந்து கொண்டு கண்தானத்தின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி, பேரணியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கண்தானம் குறித்து பேராசிரியா்கள் மூலம் கருத்துரைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணா் சந்திரசேகரனுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) கணேஷ்பாபு, கண் மருத்துவத் துறை தலைமை மருத்துவா் ராஜா, கண் மருத்துவா்கள் காயத்ரி, சக்திவேல், சியாமளா, சுபசங்கரி, பிரீத்திகா, தேஜஸ்வி, மருத்துவா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்

முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப். 11-இல் துணை முதல்வா் பரமக்குடி வருகை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகிற 11-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து திமுக செயல்வீரா்கள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலுக்கு வரும் வெளிமாநில பக்தா்களிடம் அதிக பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் வெளி மாநில பக்தா்களிடம் அதிகளவு பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய யாத்திரை பணியாளா் சங்கம் சாா்பில் காவல் துறை உதவி கண்காணிப்பாளா் அ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது: அமைச்சா் வழங்கினாா்

கமுதி அடுத்த ராமசாமிபட்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஸ் நல்லாசிரியா் விருதை வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அ... மேலும் பார்க்க