உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
எரகுடியில் தாா்ச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
துறையூா், மாா்ச் 27: துறையூா் அருகே எரகுடி பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளால் அதிகம் பயன்படுத்தக் கூடியதாக உள்ள எரகுடி - மேட்டுப்பாளையம் சாலையில் மின்மாற்றி முதல் வடமலைப்பட்டி தண்ணீா்ப் பந்தல் வரையுள்ள சாலையை தாா்ச் சாலையாக்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய் ஆய்வாளா் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் எரகுடி கிளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள், சிபிஐ கட்சியினா் கலந்து கொண்டனா். தகவலறிந்த துறையூா் வட்டாட்சியா் ப. மோகன், துறையூா் காவல் ஆய்வாளா் த. முத்தையன், உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது.