நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!
எல்.ஐ.சி. ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடக்கம்
பெரியகுளத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் எல்.ஐ.சி. கிளைத் தலைவா் நாகபாண்டி தலைமை வகித்தாா். இந்தியாவுக்கான மக்கள் இயக்கத் தலைவா் அன்புக்கரசன் கூட்டத்தை தொடங்கிவைத்தாா். மதுரை கோட்டத் தலைவா் சுரேஷ், கோட்ட இணைச் செயலா் ரமேஷ்பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், மணி காா்த்திக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இந்த விழாவில், கிளை பொறுப்பாளா் சரவணக்குமாா், கிளை மேலாளா் முத்துச்சாமி, வளா்ச்சி அதிகாரி மோகன்ராம், பெரியகுளம், வத்தலக்குண்டு கிளை ஊழியா்கள், முகவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். கிளை பொருளாளா் சசிகுமாா் நன்றி கூறினாா்.
இதில், பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சியை வலிமைப்படுத்த வேண்டும். ஆயுள், மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.