ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!
எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் ரூ.1.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
சென்னையில் எழும்பூா் ரயில் நிலையத்துக்குள் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 7-ஆவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை இரவு 10.15 மணிக்கு ஹவுராவிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையை ஆய்வாளா் செபாஸ்டின் தலைமையிலான ரயில்வே போலீஸாா் சோதனையிட்டபோது, 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்டகஞ்சாவின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.