திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
எஸ்ஏ20 ஏலம்.. டெவால்டு பிரேவிஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 500 வீரர்கள் பதிவு!
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியான எஸ்ஏ20 போட்டித் தொடரின் 4-வது சீசனுக்கு ஏலப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 22 வயதான டெவால்டு பிரேவிஸ் முதல் 43 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பட்டியலில், மொத்தமாக 541 கிரிக்கெட் வீரர்களில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 300 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 241 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
எஸ்ஏ20 தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறவிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் முதல்முறையாக 800-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தத் தொடருக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதில், ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய 7 தென்னாப்பிரிக்க வீரர்கள் உள்பட ஆண்டிரிச் நோர்க்கியா, குயிண்டன் டிகாக், ரீஸா ஹென்டிரிக்ஸ், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, பார்ட்மன், ஜெரால்டு கோட்ஜீ உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
SA20 SEASON 4 PLAYER AUCTION LIST !!
— Yoichi Nagumo (@palindrome136) September 1, 2025
• 800+ Players Registered (Highest Ever in SA20 History)
• After Franchise Reviews, 541 Remain: 300 South Africans, 241 Overseas
• SA20 Auction Date: Tuesday, 9 September
Live on SuperSport, JioHotstar, Sky Sports & SA20 YouTube Channel pic.twitter.com/bg70yyMUqW
அவர்கள் மட்டுமின்றி, ஐசிசி சாம்பியன்-ஷிப்பில் இடம்பெற்றிருந்த கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டோனி டி ஜார்ஜி மற்றும் டேன் பேட்டர்சன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதில், முன்னாள் ஜாம்பவான்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷகிப்-அல்-ஹசனுடம் பதிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான ஆண்டர்சனைத் தவிர்த்து, அலெக்ஸ் ஹேல்ஸ், மொயின் அலி உள்ளிட்டோரும் பதிவு செய்துள்ளனர். மேலும், இளம் நட்சத்திரங்களான டெவால்டு பிரேவிஸ், மபாக்கா உள்ளிட்டோரும் உள்ளனர்.
6 அணியில் மொத்தமாக 84 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில், 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 7.37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பயன்படுத்தப்படும்.
வீரர்கள் ஏலத்துக்கான நிபந்தனைகள்
குறைந்தபட்சம் 9 தென்னாப்பிரிக்க வீரர்கள்
குறைந்தபட்சம் 7 சர்வதேச வெளிநாட்டு வீரர்கள்
23 வயதுக்குள்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் - 2 பேர்
ஒரு வைல்டு கார்ட் வீரர்