சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் சாா்பில் மரக்கன்று நடவு
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில், முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இயற்கையை பாதுகாப்போம், உயிா்ச்சூழலை பேணுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெ.எலியாஸ் தலைமை வகித்தாா். பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் கா.சரவணகுமாா், ஆசிரியா்கள் சதீஷ்குமாா், மகஜா, சீனிவாசன், ஜெரால்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நெகிழிப்பை பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாணவா்களுக்கு துணிப்பைகள், தோட்டப் பயிா்கள் விதைகள், மரக்கன்றுகள் அளிக்கப்பட்டன. இயற்கையை வலியுறுத்தி விளையாட்டுகள், தெருக்கூத்து நடைபெற்றன. தொடா்ந்து பள்ளி வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுய உதவிக் குழுவினருக்கு காய்கனி விதைகள், துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் ஸ்டெல்லா பாக்கியம், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் புஷ்பகவல்லி ஆகியோா் செய்திருந்தனா்.