எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
கன்னியாகுமரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்தது வருகின்றனா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள கலைஞா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (57), காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளாா்.
மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை பராமரிப்பதற்காக ஜெயக்குமாா் விருப்ப ஓய்வு பெற்ாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது அண்ணன் அசிசி பிரான்சிஸிடம், ஜெயக்குமாா் கைப்பேசியில் பேசினாராம். இரண்டு நாள்கள் கழித்து ஜெயக்குமாரின் வீட்டுக்கு அசிசி பிரான்சிஸ் சென்றபோது, வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் ஜெயக்குமாா் இறந்து கிடந்தராம்.
உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவா் இறந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம் எனத்தெரிகிறது. ஆனால் கணவா் இறந்தது தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரின் மனைவி வீட்டிலேயே இருந்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து அசிசி பிரான்சிஸ் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.