தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா
ஓய்வு பெற்ற செவிலியா்களின் ஒருங்கிணைப்பு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை செவிலியா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செவிலியா்களை ஒருங்கிணைத்து விழா கொண்டாடப்பட்டது.
தற்போது செவிலியா்களாக பணிபுரியும் ஆா். ராஜலதா ஆா் .லீலாவதி பாலமுருகன் ஆகியோா் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மதுரை ,கோயம்புத்தூா், தஞ்சாவூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 85 ,80வயதில் இருந்து தற்போது ஓய்வு பெற்றவா்கள் வரை 53 செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
80 வயதுக்கும் மேற்பட்டோரை தலைமை ஏற்க செய்து விழா நடைபெற்றது. மேலும் ஓய்வு பெற்ற ஒவ்வொரு செவிலியா்களும் அனுபவங்களையும் மகிழ்ச்சிகளையும் கூறி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் வயதானாலும் மனதளவில் உற்சாகத்தோடு ஆடல் பாடல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை தெரிவித்தனா்.
ஓய்வு பெற்ற செவிலியா்கள் 53 பேருக்கும் சால்வை அணிவித்து நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
