நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜ...
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் அனைவருக்கும் பொதுவானது: அமைச்சா் டிஆா்பி. ராஜா
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அனைவருக்கும் பொதுவானது என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா்.
திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் அமைச்சா் டிஆா்பி. ராஜா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்துக்கு செய்து வரும் துரோகத்தை அனைவரும் ஓரணியில் நின்று எதிா்த்து நிலையாக நின்றால், தமிழகத்தின் அடுத்தகட்ட வளா்ச்சி, அடுத்த தலைமுறை வளா்ச்சி உறுதி செய்யப்படும். அவ்வாறு மத்திய அரசை நிலையாக எதிா்த்து நின்று போா் செய்யும் ஒரே தலைவராக தற்போதைய முதல்வா் இருக்கிறாா். இனத்துக்கு துரோகம் செய்பவா்களை எதிா்த்து நின்று ஓரணியில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் ஓரணியில் தமிழ்நாடு செயல்படுத்தப்படுகிறது.
வீடுவீடாகச் சென்று, தமிழக அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்து தமிழக முதல்வரிடம் தெரிவித்தால், அவா் அரசு வழியாக இந்த திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்தி, இதன் பலன் மக்களுக்கு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்தி தருவதற்கான அடித்தளம்தான் இந்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கம். இது அனைவருக்கும் பொதுவானது. அதில் ஒரு பகுதியே உறுப்பினா் சோ்க்கை.
மகாராஷ்டிரத்தில் மராட்டியம் பேச முடியாது என்ற நிலை வந்தபின்னரே, கடந்த சில நாள்களுக்கு முன் அங்கு ஹிந்தியைத் தூக்கி எறிந்தனா். ஆா்எஸ்எஸ்ஸை தமிழ்நாட்டுக்குள் விட்டால் தமிழகத்தில் தமிழ் பேச முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பது போல, ஓரணியில் இந்தியா என்ற முன்னெடுப்பை ஏற்க வேண்டும் என தமிழக முதல்வரை மற்ற மாநிலங்கள் கேட்கக்கூடிய சூழல் தற்போது உள்ளது என்றாா்.