``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே
கச்சத்தீவு
பாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.
இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை விவகாரம் இந்தியா–இலங்கை இடையே நீடித்தது. 28.06.1974 அன்று இந்தியா - இலங்கை கடல்சார் எல்லை உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்த கச்சத்தீவை மீட்க வேண்டும், மீண்டும் இந்தியா அதை தன் வசப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
இதற்கிடையில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்படுத்தப்படுதல், துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததால், 'கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்தது.

தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில்,
"தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணவும், கச்சத்தீவை மீட்பதற்காக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் விரும்புகிறது" எனப் பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்சனையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு பயணம்
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கே, நெடுந்தீவில் இருந்து கடற்படை ரோந்து கப்பல் மூலம் இந்தியா–இலங்கை இடையே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவை பார்வையிட்டு, கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து பேசியிருக்கிறார்.
இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவைப் பார்வையிட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக கவனிக்கப்படுகிறது.

இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டதில்லை. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசாநாயக்கே கச்சத்தீவைப் பார்வையிட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாகக் கவனிக்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து பேசியிருக்கும் இலங்கை அதிபர் அனுரகுமார,
"கச்சத்தீவை மையப்படுத்தி சில பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. கச்சத்தீவு எங்கள் பூமி, என் மக்களுக்கு சொந்தமானது. அந்த நிலப்பரப்பும், அந்த வான்பரப்பும் எமது மக்களுக்குச் சொந்தமானது. அதை யாரும் கைப்பற்ற முடியாது. அதை அடிமைப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.
நாட்டில் எந்தவொரு இடத்திலேயே பிறந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்தக் கலாச்சாரத்தினுள் வாழ்ந்தாலும், அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த அரசாங்கத்தின் கடமை" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs