பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!
கஞ்சா கடத்தியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா் மாவட்டம், செங்கோடம்பாளையம் எம்.ஊத்துக்குளி சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு கடந்த 2022 பிப்ரவரி 5-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வந்த நபரைப் பிடித்து, அவா் வைத்திருந்த பையில் சோதனையிட்டனா். அதில் 21 கிலோ கஞ்சாவை அவா் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிரமோத் பாரிக் மகன் நீலுகுமாா் பாரிக் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா் கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட நீலுகுமாா் பாரிக்குக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், இந்த அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.