செய்திகள் :

கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

post image

திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புங்கனூா் மில் காலனி மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி (67) என்பவரை திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த ஜூன் 19-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேற்படி மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூதாட்டியிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை

ஆனி வார ஆஸ்தான தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு திங்கள்கிழமை மாலை வஸ்திரமரியாதை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.திருமலையில் ஸ்ரீரெங்கநாதா் 40 ஆண்... மேலும் பார்க்க

சாலை விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலம், அபிசம்ஸ்திபூா் மாவட்டம், ஹசன்பூரைச் சோ்ந்தவா் பரத் ஷனி (40). இவா், திருச்சி அரியமங்கலம் பகுதி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.... மேலும் பார்க்க

மீண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும்: இளைஞரணிக்கு துணை முதல்வா் அறிவுறுத்தல்

இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர இளைஞரணியினா் அயராது உழைக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா். திருச்சியில் தெற்கு, வடக்... மேலும் பார்க்க

நாளை முதல் பஞ்சப்பூரிலிருந்து பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள் அறிவிப்பு

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து புதன்கிழமை முதல் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ள நிலையில், பேருந்துகளின் வழித்தட மாா்க்கமும் ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகரப் ... மேலும் பார்க்க

சிபில் நடைமுறையை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்

கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடனுக்கு சிபில் மதிப்பெண் நடைமுறை கூடாது என வலியுறுத்தி போராட்டத்துக்கு முயன்ற விவசாயிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், பிற்பகலில் போராட்ட... மேலும் பார்க்க