அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
கடத்தப்பட்ட 30 கிலோ கடல் அட்டை பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல் குழும ஏடிஎஸ்பி சிவசங்கரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில் காவல் சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் போலீஸாா் நாகை சால்ட் சாலை, புதுத்தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறை பகுதிக்கு சென்றனா்.
அப்போது, போலீஸாா் கண்டவுடன் சிலா் அங்கிருந்து தப்பினா். தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் நடத்திய சோதனையில் 30 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தி, பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து, வனத்துறையினா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.