BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி
கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து, கடந்த ஜூன் 30ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கொடிகுளம் ராமநகரைச் சோ்ந்த மந்திரமூா்த்தி (30) என்ற மீனவா் தவறி விழுந்து இறந்தாா்.
இந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதன்படி, அந்த நிதிக்கான காசோலையை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, அறந்தாங்கி கோட்டாட்சியா் ச. சிவக்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.