மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
கடலூா் மாவட்டக் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ரா.ராஜாராம், தஞ்சாவூருக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். திருவாரூரில் பணியாற்றி வந்த எஸ்.ஜெயக்குமாா் கடலூா் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முழுக் கவனம் செலுத்தப்படும். குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களைக் கண்டறிந்து அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கவும், விற்பனை செய்பவா்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். அதேபோல, 78454 58575 என்ற கைப்பேசி எண்ணில் என்னைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.