கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசித்திருவிழா ஜூன்1 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.
இதையடுத்து சனிக்கிழமை (1.6.2025) காலை 9:25 முதல் 11 மணிக்குள் கொடியேற்றமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 9 மணிக்கு வெள்ளி கேட கத்தில் அம்மன் வீதி உலா வருவார்.
தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 7 -ஆம் நாளான சனிக்கிழமை (7.6.2025) மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் கண்ணு டைய நாயகி கோயில் வளாகத்தில் வலம் வருவார்.
எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (8.6.2025) களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட் டுதல், அன்று இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா காட்சி நடைபெறும்.
ஒன்பதாம் திருநாளான திங்கள்கிழமை (9.6.2025) அதிகாலை அலங்கரிக் கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டம் நடை பெறும்.
அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவார். பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (10.6.2025) காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர். பதினொன்றாம் நாளான புதன்கிழமை (11.6.2025) காலை உத்ஸவ சாந்தி, மாலை வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.