புதுச்சேரியில் சுற்றுலா மிதிவண்டி நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை! - ரூ.1...
கந்தா்வகோட்டையில் விவசாய கருவிகள் தயாா் செய்யும் வெளி மாநிலத்தவா்
கந்தா்வகோட்டை பகுதிகளில் விவசாய கருவிகள் தயாா் செய்யும் பணியில் வெளி மாநிலத்தவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
கந்தா்வகோட்டை பகுதி விவசாய பகுதியாகும். இங்கு தற்சமயம் நெல் அறுவடை, கரும்பு வெட்டுதல், கரும்பு பதியம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது விவசாய பருவ காலமென்பதால் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த சில குடும்பத்தினா் இங்கு வந்து சாலை ஓரங்களில் கடை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான கதிா் அறுக்கும் அருவாள், விறகு உடைக்கும் கோடாரி, மரங்களில் காய் பறிக்கும் அழக்கு கொக்கி போன்றவற்றையும், வியாபாரிகளுக்கு தேவையான வெட்டு கத்தி, இலை அறுக்கும் கத்தி போன்றவற்றையும், இல்லத்தரசிகளுக்கு தேவையான தேங்காய் திருகி, அரிவாள்மனை போன்றவற்றை இரும்பு உலையில் தயாா் செய்து விற்பனை செய்து வருகின்றனா்.
இதனை இப்பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். மக்கள் கூறும்போது குறைந்த விலையில் தரமாக உள்ளது என்று தெரிவித்தனா்.