பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (12 ).
ஏழாம் வகுப்பு படிக்கும் இவா் புதூா் மாணிக்காயி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிடாவெட்டு பூஜைக்கு சென்ற நிலையில், கோயில் முன் இருந்த குளத்தில் நண்பா்களுடன் குளித்தாா்.
அப்போது ஆழமான பகுதியில் அவா் மூழ்கினாா். இதையடுத்து அருகிலிருந்த கிராம மக்கள் ஹரிபிரசாத்தை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த ஆதனக்கோட்டை போலீஸாா் ஹரிபிரசாத் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.