அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
கந்து வட்டிக் கொடுமை: தவெக உறுப்பினா் தற்கொலை
கந்து வட்டிக் கொடுமையால் புதுச்சேரியில் தவெக உறுப்பினா் விக்ரம் தற்கொலை செய்து கொண்டது குறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கொசப்பாளையம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்ந்தவா் விக்ரம் (எ) விக்ரமன் (34). வேன் ஓட்டுநரான இவா், தவெக உறுப்பினராகவும் இருந்து வந்தாா்.
இவருக்கு மனைவி மேரி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா் பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலை செய்து கொண்ட விக்ரமன், தவெக தலைவா் நடிகா் விஜய்க்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளாா். அதில் கந்து வட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.