கருணாநிதி 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ஆத்தூா் ராணிப்பேட்டை திடலில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, துணைச் செயலாளா் கு.சின்னதுரை, ஆத்தூா் வடக்கு நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், நகர துணைச் செயலாளா் புவனேஸ்வரி வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
நரசிங்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், அவைத் தலைவா் ராமசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
படவரி...
ஆத்தூா் ராணிப்பேட்டையில் கருணாநிதியின் சிலைக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. உள்ளிட்ட திமுகவினா்.