கரூரில் இன்று திமுக சாா்பில் சிறப்பு பட்டிமன்றம்
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் சிறப்பு பட்டிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிக்கை:
திராவிட மாடல் முதல்வரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் கொள்கை வழி நிற்பதே- மக்கள் நலத்திட்டங்களே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்துக்கு நடுவராக கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ. லியோனி பங்கேற்கிறாா். கொள்கை வழி நிற்பதே அணியில் பேராசிரியா் விஜயகுமாரும், கடலூா் தணிகை வேலனும், மக்கள் நலத்திட்டங்களே என்ற அணியில் கவிஞா் இனியவன், டாக்டா் வேதநாயகி ஆகியோரும் பேசுகிறாா்கள். மேலும் முதல்வரின் பிறந்த தினத்தில் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் கட்சியினரும், பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.