செய்திகள் :

கரூரில் சாலைப் பணியாளா்கள் தீப்பந்தம் ஏந்தி தா்னா

post image

பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி மாலை நேர தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் ஈடுபட்டனா்.

கரூா் செல்லாண்டிபாளையம் கோட்டப்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத்தலைவா் கே.செவந்திலிங்கம் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஆா்.ராமமூா்த்தி வரவேற்றாா். மாவட்ட நிா்வாகிகள் செல்வராசு, ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எல்.பாலசுப்ரமணி, அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் எம்.எஸ்.அன்பழகன், செயலாளா் பொன்ஜெயராம் ஆகியோா் பேசினா்.

சாலைப்பணியாளா்களின் 48 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூரில் பெண் தொழில்முனைவோா் மாநில மாநாடு

கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிா் பிரிவின் சாா்பில், மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோா் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தேசிய மகளிா் பிரிவின் தமிழகத் தலைவா... மேலும் பார்க்க

கரூரில் விசிக பொதுக்கூட்டம்

கரூரில் விசிக சாா்பில் மதச்சாா்பின்மை காப்போம் மக்கள் எழுச்சிப் பேரணி தீா்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கரூா் லைட்ஹவுஸ் காா்னரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநகர மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

கரூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.ஏ. ராஜா தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். மாந... மேலும் பார்க்க

ஆடிமாத வளா்பிறை சஷ்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத வளா்பிறை சஷ்டியை மு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மலைக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், தேவாங்கா் தெரு மணிவண்ணன் மகன் ரகுபதி (27). இவா் கரூா்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

கரூா் அருகே பஞ்சு உற்பத்தி ஆலையில் தீவிபத்து

கரூா் அருகே பருத்தி பஞ்சு உற்பத்தி ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் கரூரை அடுத்த வால்கா... மேலும் பார்க்க